Sunday 31 December 2017

இந்தியாவில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த பத்து சுற்றுலா தளங்கள்

2017 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த பத்து சுற்றுலா தளங்களின் பட்டியல் (கோவா கடற்கரை, கேட்வே ஆப் இந்தியா - மும்பை, செங்கோட்டை - டெல்லி, ஜெய்ஸல்மீர் கோட்டை - ராஜஸ்தான், படகு வீடுகள் -கேரளா, அக்ஷர்தாம் - குஜராத், குதுப் மினார் - டெல்லி, அஜந்தா குகை -அவுரங்காபாத், பொற்கோயில் - அம்ரித்சர், தாஜ்மகால் - ஆக்ரா) காணொளி காட்சியாக தொகுக்கபட்டுள்ளது... காணொளி காட்சி தொகுப்பு உங்கள் பார்வைக்கு:

-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday 23 December 2017

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற சிறந்த பத்து ஐரோப்பிய நகரங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துவிட்டாலே ஐரோப்பிய நகரங்களில் உள்ள வீடுகளிலும், தெருக்களிலும் மக்கள் கிறிஸ்துமஸ் குடில், கிருஸ்துமஸ்  மரம், வண்ண விளக்குகளால் ஒளிரும் கட்டிடங்கள் என்று அலங்காரங்களாலும், வாண வேடிக்கைகளாலும் சுற்றுலா பயணிகளை பிரமிக்க செய்து விடுகிறார்கள். வணிக வளாகங்களில் ஷாப்பிங் ஒரு புறம், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கென்று தயாரித்த மிக சிறந்த ஐரோப்பிய உணவு வகைகளை பரிமாறும் உணவகங்கள் ஒருபுறம் என்று கண்களுக்கும், நாக்குக்கும் திகட்டாத விருந்தளிக்கிறது கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சுற்றுலா செல்ல திட்டம் இருந்தால் கீழ்காணும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற சிறந்த பத்து ஐரோப்பிய நகரங்களை தவற விட்டு விடாதீர்கள்...   


10: ஜூரிச், சுவிட்சர்லான்து 
9: கோபன்ஹேகன், டென்மார்க்
8: ரோவாநெமி, பின்லாந்து
7: நூரெம்பெர்க், ஜெர்மனி
6: ஸ்ட்ராஸ்பெர்க், பிரான்ஸ்
5: வார்சா, போலந்து
4: லிஸ்பன், போர்டுகல்
3: லக்செம்பெர்க் நகரம், லக்செம்பெர்க்
2: பிரேகு,செக் குடியரசு 
1: ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து

Saturday 16 December 2017

சிம்ஃபனி ஆப் தி ஸீஸ் - உலகின் மிகப்பெரிய உல்லாச பயண கப்பல்


                                                                                  புகைப்படம்: ராயல் கரீபியன் இண்டர்நேஷனல்

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இப்போது பிரான்ஸ் நாட்டில் தயாரிப்பில் இருக்கும் உலகின் மிகப்பெரிய உல்லாச பயண கப்பலான சிம்ஃபனி ஆப் தி ஸீஸ் (கடலின் சிம்ஃபனி)  தன் முதல் பயணத்தை துவங்க உள்ளது. 230,000 டன் மொத்த எடை கொண்ட இந்த கப்பல் கடலில் ஒரு சிறிய மிதக்கும் நகரம் போல் காட்சியளிக்கிறது. 




இந்த கப்பலை தயாரித்து வரும் நிறுவனமான ராயல் கரீபியன் இண்டர்நேஷனல் இதற்கு முன்பு உலகின் மிகப்பெரிய கப்பலான ஹார்மனி ஆப் தி ஸீஸ் என்ற பெயருள்ள கப்பலை தயாரித்து அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. சிம்ஃபனி ஆப் தி ஸீஸ் கப்பலுக்கு தம்பி என்று ஹார்மனி ஆப் தி ஸீஸ் கப்பலை சொல்லலாம். 

                                                                                                      புகைப்படம்: ராயல் கரீபியன் இண்டர்நேஷனல்

பதினாறு தளங்களில் 2759 தங்கும் அறைகளை கொண்டுள்ள இந்த சொகுசு கப்பலின்  முதல் பயணத்தில் 5500 விருந்தினர்கள் பயணம் செய்ய உள்ளனர். ஒரு சொகுசு கப்பலுக்கு உரிய எல்லா உயர்தர சேவைகளையும் இந்த கப்பலில் அனுபவிக்க முடியும். பயணிகளை மகிழ்விக்க கப்பலுக்கு உள்ளே தண்ணீர் பூங்கா, லேசர் ஷோ அரங்கம், பனி சறுக்கு விளையாட்டு தளம், மலையேற்ற பொழுதுபோக்கு அரங்கு, ஷாப்பிங் மால், தியேட்டர்கள், நைட் கிளப், காசினோக்கள், ரோபோக்கள் வேலை பார்க்கும் பார் என்று இந்த கப்பலுக்குள் ஒரு உல்லாச நகரத்தை உருவாக்கியுள்ளனர். 

புகைப்படம்: ராயல் கரீபியன் இண்டர்நேஷனல்

மத்திய தரைக்கடல் பகுதியில் பயனத்தை துவக்கி ஐரோப்பிய கடற்பகுதிகளைச் சுற்றி பயணம் மேற்கொண்டு, மியாமி துறைமுகம் வழியாக கரிபியன் கடற்கரை நோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோடை காலத்தில் இந்த கப்பலில் பயணிக்கும் விருந்தினர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த கடல் பயண அனுபவத்தை தரும் என்று நம்பலாம். 

உலகின் மிக பெரிய பத்து பயண கப்பல்கள்



லகின் மிகப்பெரிய பத்து உல்லாச பயணக் கப்பல்களின் பட்டியலை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறது இந்த இரண்டு நிமிட கானொளி காட்சி
10. நார்வே எபிக்
9. லிபர்டி ஆஃப் தி ஸீஸ்
8. நோர்வே எஸ்கேப்
7. நார்வே ஜாய்
6. ஒவேஷன் ஆஃப் தி ஸீஸ்
5. ஆன்தம் ஆஃப்  தி ஸீஸ்
4. குவாண்டம் ஆஃப்  தி ஸீஸ்
3. ஒயாசிஸ் ஆஃப்  தி ஸீஸ்
2. அல்யூர் ஆஃப்  தி ஸீஸ்
1. ஹார்மனி ஆஃப்  தி ஸீஸ்


தற்போது தயாரிப்பில் இருக்கும் சிம்ஃபனி ஆப் தி ஸீஸ் உல்லாச பயணக் கப்பல் தன் முதல் பயணத்தை துவங்கும் போது,  ஹார்மனி ஆஃப்  தி ஸீஸ் கப்பலை முதலாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்துக்கு கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 9 December 2017

உலகில் டாப் 10 சமாதானம் தவழும் நாடுகள்

ல்லா மனிதர்களுமே உலகில் மகிழ்ச்சியும், அமைதியும் தவழும் இடங்களில் வாழ்கை நடத்தவே விரும்புவார்கள், உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டில் நிலவும் சமாதான நிலையையும்  உலக சமாதான குறியீடு கொண்டு நாம் அறிந்து கொள்ளலாம், உலகில் எந்த நாட்டுக்கும் பயணம் செய்யும் முன்பு உலக சமாதான குறியீடு புள்ளிகளை கொண்டு அந்த நாட்டின் சமாதான நிலையை தெரிந்து கொண்டு நாம் பயணிக்கலாம். 


பொருளாதாரம் மற்றும் சமாதான ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும்  உலக அமைதி குறியீட்டு அறிக்கையானது 162 நாடுகளில் நிலவும் சமாதான நிலையை ஒப்பிட்டு காட்டுகிறது, இந்த நிறுவனம் ஒவ்வொரு நாட்டிலும்  நிலவும் சமாதான நிலையை அந்த நாட்டில் இருக்கும் யுத்தமில்லாத நிலை, கல்வி முறை, மற்ற மாநிலங்களுடன், நாடுகளுடன் உள்ள சுமுக உறவு, அமைதியை நிலைநாட்டுவதில் ஐக்கிய நாடுகள் சபையோடு இணைந்த செயல்பாடுகள், நாட்டின் கொடும் குற்றங்களின் எண்ணிக்கை போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு உலக சமாதான குறியீட்டு புள்ளிகள் கொடுக்கப்படுகிறது. 

2017 ஆம் ஆண்டின் முதல் பத்து இடங்களை பிடித்த சமாதானம் தவழும் நாடுகளின் பட்டியல்: 
10: ஸ்லோவேனியா, 9: ஜப்பான், 8: கனடா,  7: சுவிட்சர்லாந்து, 6: செக் குடியரசு, 5: போர்ச்சுகல், 4: நியூசிலாந்து, 3: ஆஸ்திரியா, 2: டென்மார்க், 1: ஐஸ்லாந்து
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Sunday 3 December 2017

சிங்கப்பூர் நாட்டின் டாப் 10 சுற்றுலா தளங்கள்

சிங்கப்பூர் - லயன் சிட்டி (சிங்க நகரம்) - சிங்கப்பூர் நாட்டை காணும் போதே உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். கண்ணை கவரும் இந்த நகரம் பழமையும் புதுமையும் கலந்த நவீன மற்றும் மேற்கத்திய நாகரிகத்தின் கலவையாக திகழ்கிறது. சிங்கப்பூர் உலகின் சிறந்த திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட தூய்மையான நகரமாக கருதப்படுகிறது. இது ஆசியாவின் மிகவும் அழகிய நகரங்களில் ஒன்று. நூற்றாண்டுகள் கடந்த பழமையான சந்தைகள் உள்ள வீதிகளும், நவீன கட்டிட கலை கொண்டு கட்டப்பட்டு உள்ள வானுயர்ந்த கட்டிடங்களும், கண்ணை கவரும் சுற்றுலா தளங்களும், ஷாப்பிங் மால்களும் என்று சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு நிறைய பொழுதுபோக்கு ஸ்தலங்களை கொண்டுள்ளது சிங்கப்பூர்.



சிங்கப்பூர் நாட்டின் மிக சிறந்த பத்து சுற்றுலா தளங்களின் பட்டியல்
10. மெரினா பே சான்ட்ஸ்
9. சிங்கப்பூர் ஃப்ளையர்
8. புத்தா டூத்  கோயில்
7. இரவு சஃபாரி
6. சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா
5. கடற்கரையோர தோட்டங்கள்
4. ராஃபிள்ஸ் ஹோட்டல்
3. கிளார்க் க்வே
2. செண்டோசா தீவு
1. ஆர்ச்சர்ட் சாலை

சிங்கப்பூர் நாட்டின் மிக சிறந்த பத்து சுற்றுலா தளங்களின் காணொளி காட்சி தொகுப்பு