இந்தியாவின் மிக பெரிய மாநிலமான ராஜஸ்தான் (342,239 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு) நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10.4 % அளவு மக்கள் வாழும் மாநிலம் ராஜஸ்தான். பழங்காலத்தில் ராஜாக்களின் நிலம், அல்லது ராஜபுதனா என்ற அழைக்கப்பட்ட பெயரே பின் நாட்களில் ராஜஸ்தான் என்று இந்த மாநிலத்திற்கு பெயர் வர காரணமாய் இருக்கிறது. மிக பெரிய நிலபரப்பை கொண்டிருந்தாலும் மாநிலத்தின் பெரும்பகுதி தார் பாலைவனம் தான் நிறைந்துள்ளது. ராஜாக்களின் நிலம் என்ற பெயருக்கேற்ப இந்த மாநிலம் கலை மற்றும் கலாச்சாரத்தை விளக்கும் ராஜாக்கள் வாழ்ந்த பழங்கால கோட்டைகள், அரண்மனைகளால் மாநிலம் நிறைந்து கண்களுக்கு விருந்தளிக்கிறது. ராஜசதான் மாநிலத்தில் உள்ள சிறந்த பத்து சுற்றுலா தளங்களை (ஜெய்ப்பூர், உதய்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மேர், பிகானர், புஷ்கர், சவாய் மாதோபூர், சித்தோர்கர், மவுண்ட் அபு, அல்வர்) இந்த காணொளி காட்சி தொகுப்பில் காணலாம்.