10. பெய்ஜிங், சீனா:
பிரகாசமான மற்றும் அழகான - சீனா ஆசியாவில் மட்டுமல்லாமல் முழு உலகிலும் சிறந்த கலாச்சாரம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். 860 ஆண்டுகளுக்கு மேலாக சீனாவின் தலைநகரமாக இருந்து வரும் பெய்ஜிங் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் காஸ்மோபாலிட்டன் நகரங்களில் ஒன்றாகும். 3000 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்துடன் உள்ள உலகின் மிக அழகான நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரத்தில் யுனெஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய வரலாற்று தளங்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளது.
9. தைபேயி, தைவான்:
உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டிடமான தைபே 101 இந்த நகரின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. சுற்றுலா பயணிகள் தைபேயி நகரை மொய்க்க காரணம் இங்கு கிடைக்கும் பல நாட்டு உணவு வகைகள், தைவான் மற்றும் சீன உணவு வகைகள் கொண்ட பல உணவகங்கள் இந்த நகரத்தில் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் இந்நகரில் உள்ள தெருவோர உணவகங்களின் சுவை மிகுந்த உணவுகளை ருசிப்பதற்காகவே மீண்டும் மீண்டும் இந்த நகரத்துக்கு வருகின்றனர்.
8. கோலாலம்பூர், மலேசியா:
கண்களை மட்டுமல்ல இதயத்தையும் கவரக்கூடிய இரவில் ஒளிரும் நகரமாக ஜொலிக்கிறது கோலாலம்பூர். நகர மையத்தில் உள்ள பெட்ரோனாஸ் டவர் (உலகின் மிக உயரமான இரட்டை கோபுரங்கள்) இந்த நகரத்தின் அழகை வெளிகட்டுகிறது. கோலாலம்பூர், ஷாப்பிங் விரும்பிகளுக்கு ஏற்ற நகரமாகும், மிக பெரிய ஷாப்பிங் மால்களால் இந்த நகரம் நிறைந்துள்ளது. ஆன்மீக தேடல் கொண்டவர்களுக்கு இந்த நகரத்தில் உள்ள கோயில்களும் மசூதிகளும் பெரும் வரப்பிரசாதமாகும்
சியோல் என்று சொன்னவுடன் இந்த நகரத்தின் கே-பாப் இசை கலாச்சாரம்மற்றும் நடன கலை நினைவுக்கு வரலாம். இந்த நகரத்தில் பாரம்பரியத்தை பறைசாற்றும் பழங்காலத்தில் கட்டப்பட்ட அரண்மனைகளும் நவீன நாகரிகத்தை பறைசாற்றும் விண்ணை முட்டும் கட்டிடங்களும் நிறைந்துள்ளன. இங்குள்ள கண்ணை கவரும் அழகிய மலர் பாதை இந்த நகரத்தின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
6. ஷாங்காய், சீனா:
பிரமிப்பூட்டும் ஷாங்காய் - உலகின் சிறந்த ஷாப்பிங் சுற்றுலா தளங்களில் ஒன்று, ஷாங்காய் நகரை ஓரியண்டல் பாரிஸ் என்றும் அழைக்கிறார்கள். பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் மற்றும் கலை அழகு இவைகள் கலந்த அழகு மிளிரும் நகரமாக காட்சியளிக்கிறது , இரவில் ஆறுகள் வண்ணமயமான விளக்குகளின் ஒளியை பிரதிபலிப்பது உள்ளதை கொள்ளை கொள்ளும். இது சீனாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வளர்ச்சியடைந்த நகரமாகும். இந்த நகரம் 200 மீட்டர் அளவுக்கு மேல் 18 உயரமான கட்டிடங்களைக் கொண்டுள்ளது, இதில் உயரமான கட்டிடங்களில் ஒன்றில் உலக புகழ்பெற்ற ஓரியண்டல் பெர்ல் டிவி டவர் உள்ளது.
5. ஹாங்காங்:
லூக்ஸ் நகரம் - ஹாங்காங் உலகின் முன்னணி சர்வதேச நிதி மையங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நகரம் அழகிய வானளாவிய கட்டிடங்களால் நிறைந்துள்ளது. இந்த வியக்கத்தக்க ஆசிய நகரம் வெவ்வேறு கட்டிட கலைகள் மூலம் கட்டப்பட்ட உயரமான கட்டிடங்களைக் கொண்டிருக்கிறது. வழிகாட்டி ஒருவரின் துணை கொண்டோ அல்லது கப்பல் பயணம் மூலம் நகரத்தை சுற்றி பார்ப்பது நல்லது. கண்ணை கவரும் அற்புதமான துறைமுக காட்சிகள் மூலம் நகரத்தின் கலாச்சாரம் பற்றி அறிய முடிகிறது. டிஸ்னிலேண்ட், அவென்யூ ஆப் த ஸ்டார்ஸ் மற்றும் பழமை வாய்ந்த கோயில்களால் இந்த நகரம் புகழ் பெற்றுள்ளது.
4. தோஹா, கத்தார்:
தோஹா - கத்தார் - பிரகாசிக்கும் நகை என்றும் அழைக்கப்படுகிறது, இந்த நகரம் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் தனித்துவமான பாரம்பரிய கட்டிடக்கலையின் கோவிலாக விளங்குகிறது. இந்த நகரத்தின் கடற்கரையில் மிகப்பெரிய ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் ஆசியாவிலேயே பிரமிக்கத்தக்க கட்டிடக்கலைக்கே சவால் விடும் கட்டிடங்களும் உள்ளன. இந்த நகரம் புதுமையான நவீன கட்டிடங்களை மட்டுமல்ல அழகான வரலாற்று கோட்டைகளையும் கொண்டுள்ளது. இங்குள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் கல்வி நகரத்தை பார்வையிட தவறாதீர்கள்.
3.டோக்கியோ, ஜப்பான்:
டோக்கியோ, 13.3 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு பரபரப்பு மிகுந்த நகரம், உலகின் மிக சிறப்பு வாய்ந்த கட்டிடக்கலை கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் இந்த நகரத்தில் உள்ளது. இயற்கை எழில் மிகுந்த, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, வளமான கலாச்சாரம் மற்றும் ஆடம்பரமான உணவு ஆகியவற்றின் சரியான கலவையாக இந்த நகரம் விளங்குகிறது. சுகுஜி மீன் சந்தை, இம்பீரியல் அரண்மனை மற்றும் டோக்கியோ ஸ்கைட்ரீ ஆகியவை மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களாகும்.
2. துபாய், யூஏஈ:
துபாய் - மிக அழகிய வானளாவிய, உலகின் மிக உயரமான கட்டடத்திற்கு, புர்ஜ் கலீஃபா, துபாய் உலகின் நம்பமுடியாத நவீன உள்கட்டமைப்புடன் கூடிய வர்த்தக மற்றும் சுற்றுலா தளங்கள் கொண்ட உலகின் முன்னணி நகரங்களில் ஒன்றாகும்.
1.சிங்கப்பூர்:
லயன் சிட்டி (சிங்க நகரம்) - சிங்கப்பூர் நகரத்தை காணும் போதே உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். கண்ணை கவரும் இந்த நகரம் நவீன மற்றும் மேற்கத்திய நாகரிகத்தின் கலவையாக திகழ்கிறது. சிங்கப்பூர் உலகின் சிறந்த திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட தூய்மையான நகரமாகக் கருதப்படுகிறது. இது ஆசியாவின் மிகவும் அழகிய நகரங்களில் முதலிடத்தில் உள்ளது.